கண்ணு படாம இருக்கணும், கண்ணுலையும் காயம் படாம இருக்கணும்: குஷ்புக்கு பாஜக பிரமுகர் அறிவுரை

  • IndiaGlitz, [Thursday,August 20 2020]

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து குஷ்பு ஒரு டுவீட்டை பதிவு செய்ததும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று வாழ்த்து தெரிவித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் பாஜகவுக்கு தாவ இருப்பதாக கூறப்பட்டாலும் குஷ்பு இதனை கடுமையாக மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று குஷ்புவின் கண்ணில் காயம் பட்டதை அடுத்து அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இது குறித்து டுவிட் ஒன்றையும் நேற்று குஷ்பு பதிவு செய்து இருந்தார் என்பதும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ஏராளமான ரசிகர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்வி சேகர் இது குறித்து கூறி தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது: அன்பான குஷ்பு அவர்களே! மிகவும் கவனமாக இருங்கள், விரைவில் குணமாக வாழ்த்துக்கள். கண்ணு படாம இருக்கணும், கண்ணுலையும் காயம் படாம இருக்கணும்’ என்று கூறியுள்ளார். எஸ்வி சேகரின் இந்த டுவிட்டுக்கு வழக்கம்போல் கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது
 

More News

விரைவில் திறக்கப்படும் திரையரங்குகள்: என்னென்ன நிபந்தனைகள் இருக்கலாம்?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஐந்து மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

இன்னிசை பண்ணிசை நல்லிசை அழைக்கிறது எழுந்து வா பாலு: கலைப்புலி எஸ்.தாணு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா பாதிப்பினால் வீட்டுத் தனிமை- பட்டினியால் சுருண்டு விழுந்து முதியவர் உயிரிழந்த சோகம்!!!

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தின் டி.பிலகள்ளு என்ற கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார்.

கம்போஸ் செய்த முதல் பாடலுக்கே 10 மில்லியன் பார்வையாளர்கள்: நன்றி தெரிவித்த நடிகர்

கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் இசையமைப்பாளர்களாக மாறுவதும், இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறுபவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் என்பது அனைவரும் தெரிந்ததே.

கொரோனா தடுப்பூசியை முற்றிலும் இலவசமாக அறிவித்து மக்களை மகிழ்வித்த அதிபர்!!!

ஆஸ்திரேலிய அதிபர் ஸ்காட் மோரீசன் அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.