நடிகர் சங்க தேர்தல் நாளில் 'அல்வா' கொடுக்க காத்திருக்கும் எஸ்.வி.சேகர்

  • IndiaGlitz, [Tuesday,June 18 2019]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் இந்த தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா? என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்து வருகிறது. ஏற்கனவே நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் இடத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து காவல்துறையினர்களிடம் இருந்து நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் அதே நாளில் அதாவது ஜூன் 23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தேர்தல் நடைபெறும் அதே கல்லூரியில் எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றுள்ளாராம். அந்த நாடகத்தின் டைட்டில் 'அல்வா' என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே கல்லூரி வளாகத்தில் ஒரே நாளில் தேர்தலும், நாடகமும் எப்படி நடக்கும்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஆனால் எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றுள்ளது கல்லூரியில் உள்ள அரங்கத்திற்கு மட்டும்தான் என்றும், தேர்தல் நடைபெறும் இடத்திற்கும் அரங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று பாண்டவர் அணியினர் தெரிவித்து வருகின்றனர். மேலும் தேர்தலை நிறுத்த சதி நடந்து வருவதாகவும், அரசியல் பின்னணி இல்லாமல் நடிகர் சங்க தேர்தல் நடக்கும் என நம்புவதாகவும் பாண்டவர் அணியினர் தெரிவித்து வருகின்றனர்.