நீட் தேர்வு குறித்து சூர்யாவுக்கு என்ன தெரியும்? தமிழிசை செளந்தரராஜன்

  • IndiaGlitz, [Saturday,September 09 2017]

அரியலூர் அனிதாவின் மரணத்திற்கு பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் கொளுந்துவிட்டு எரிகிறது. மாணவர்கள் அனைவரும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவதால் பெரும்பாலான கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நடிகர் சூர்யா, 'நீட் தேர்வுக்கு எதிரான தனது கருத்துக்களை பதிவு செய்தார். கல்வி மற்றும் தேர்வு முறைகளில் நவீன தீண்டாமை நிலவுவதாகவும், பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்றினால் மட்டுமே மீண்டுமொரு அனிதா உருவாகாமல் தடுக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்

சூர்யாவின் கருத்துக்கு பதில் கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், 'நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வுபற்றி எப்படி முழுமையாகத் தெரியும்? சூர்யா போன்றோர் கோடிக்காகப் பணியாற்றும்போது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம். நீட் தேர்வு கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.

தமிழிசையின் கருத்துக்கு சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 

More News

ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் சட்டத்தால் வேலையிழந்த ஓட்டுனர்

வாகனம் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம்

இந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்: இளையராஜா வேண்டுகோள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் சமீபத்தில் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ..

சிம்புவுக்கு திருமணம் நடக்க திருப்பதியில் வழிபாடு!

பிரபல நடிகர் சிம்பு தற்போது ஆங்கில படம் ஒன்றில் நடிப்பதில் பிசியாக உள்ளார்.

அரவிந்தசாமி இடத்தை பிடித்தார் எஸ்.ஜே.சூர்யா

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார்.

அனிதா அஞ்சலி நிகழ்ச்சியில் அமீர்-ரஞ்சித் கருத்து மோதல்

அரியலூர் மாணவி அனிதாவுக்கு இயக்குனர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது...