உத்திரப்பிரதேசத்துக்கு ரூ.7,000 கோடி.. தமிழ்நாட்டுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய்..! மத்திய பட்ஜெட்.

  • IndiaGlitz, [Monday,February 10 2020]

தமிழக இரயில்வே திட்டங்களுக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது தமிழகத்திற்கு மத்திய அரசு செய்கிற துரோகம் என சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

பட்ஜெட் குறித்து சர்ச்சைகளும், ஆதரவும் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன். இதுகுறித்து பேசியுள்ள சு.வெங்கடேசன் ,”ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தில் நடக்க இருக்கும் பத்து திட்டங்களுக்கு, 12,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், பட்ஜெட்டில் 10,000 ரூபாய் மட்டும் ஒதுக்கி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய அநீதி. அதே நேரம், உத்தரப் பிரதேசத்துக்கு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள் என்று பேசியுள்ளார் சு.வெங்கடேசன்.

ஜி.எஸ்.டி-யில் தமிழகம்தான் அதிகமான வருவாயை மத்திய அரசுக்குக் கொடுக்கிறது. ஆனாலும் இங்குதான் துரோகம் இழைக்கப்படுகிறது. தமிழக அரசியல் கட்சிகள் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன்.