கொரோனா எதிரொலி: விவாகரத்து பெற்ற மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்த பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அழித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தான் ஒருசிலரிடம் ஒளிந்திருந்த மனிதத் தன்மையும் வெளிப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற மனைவியை தனது குழந்தைகளுக்காக மீண்டும் வீட்டுக்கு பிரபல நடிகர் ஒருவர் அழைத்து வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கடந்த 2014ஆம் ஆண்டு தனது மனைவி சூசன்னே என்பவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடன் இருக்கும் தனது இரண்டு குழந்தைகளும் தனிமையை உணரக் கூடாது என்பதற்காக தனது முன்னாள் மனைவிக்கு அழைப்பு விடுத்தார்.
சுசன்னேவும் தனது முன்னாள் கணவரின் வேண்டுகோளை குழந்தைகளுக்காக ஏற்று தற்போது ஹிருத்திக் வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ள ஹிருத்திக் ரோஷன் தனது முன்னாள் மனைவிக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும் தனது மனைவி குழந்தைகளுடன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் ஹிருத்திக் ரோஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதிகள் கொரோனாவால் தற்போது தற்காலிகமாக இணைந்தாலும் அவர்கள் இருவரும் நிரந்தரமாக இணைய வேண்டும் என்று ஹிருத்திக் ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் விருப்பம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments