மனைவியின் நடத்தையில் சந்தேகம்!!! கத்தியால் மூக்கை அறுத்த கொடூரக் கணவன்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா ஊரடங்கினால் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான வன்முறை எப்போதும் மற்ற உலக நாடுகளைவிட அதிகம் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை அமைப்பு, ஆப்கனில் நடத்திய தேசிய கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவித்து இருக்கிறது. பாலியல் வன்முறை, உடல்ரீதியான அச்சுறுத்தல் போன்றவை ஆப்கன் பெண்களுக்கு 87% அதிகரித்து இருப்பதாகவும் அந்த கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இதனால் மனரீதியிலான அழுத்தத்துக்கும் பெண்கள் தள்ளப்படுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள்கூட பெண்கள் மது ஆசிட் வீசுவது அந்நாட்டில் சாதாரணமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைநகர் காபூலில் இருந்து 250 கி.லோ மீட்டர் தொலைவுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சார்கா. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவரை சிறுவயதிலேயே, இவருடைய உறவினர் ஒருவர் ஏமாற்றி திருமணம் செய்து கொடுத்தாகவும் கூறப்படுகிறது. தற்போது 28 வயதாகும் சார்காவிற்கு 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். கணவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சார்காவை அடிப்பதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருந்திருக்கிறார். இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத சார்கா தனது தகப்பனார் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் சார்காவின் தந்தை வீட்டிற்கு சென்று அழைத்து வந்து ஏன் என்னிடம் சொல்லாமல் போனாய், எனக்கு அவமானமாகிவிட்டது என்று துன்புறுத்தியிருக்கிறார்.
வீட்டிற்கு பின்புறம் கூட்டிச்சென்று இப்படி கேள்விகளால் துளைத்த தனது கணவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் சார்கா கூறியுள்ளார். திடீரென சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து சார்காவின் மூக்கையும் அறிந்து இருக்கிறார். ரத்தம் சொட்ட சொட்ட நின்றிருந்த சார்காவை அங்கேயே விட்டுவிட்டு சென்றதகாகவும் கூறப்படுகிறது. தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தக் கிராமத்தில் சரியான சிகிச்சை வசதிகள் இல்லாம் உள்ளூர் தலைவர்கள் பல முறை போராடி அனுமதி பெற்று சிகிச்சைக்காக பல நாட்கள் கழித்து காபூலுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
ஆரம்பத்தில் கொடுத்த சிகிச்சை சரியில்லாததால் அவரது முக அமைப்பே மாறியிருந்தது என்றும் முதலில் காயத்தின் மீதிருந்த செப்டிக்கை அகற்றவே பல நாட்கள் பிடித்தது என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த சால்மாய் குறிப்பிட்டு இருக்கிறார். இஸ்லாமிய சட்டத்தின் படி முகமாற்று அறுவை சிகிச்சை செய்வது பாவம் எனக் கருதப்படுகிறது. ஆனாலும் வேறுவழியில்லாமல் பல தடைகளுக்குப் பின்னர் சார்காவிற்கு மூக்கில் முகமாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. ஆப்கனில் இந்த வசதி குறைவு என்பதும் குறிப்பிடத்தகக்து. சார்காவின் நிலைமையை பத்திரிக்கை வழியாக தெரிந்து கொண்ட மருத்துவர் சால்மாய் தானாக முன்வந்து இவருக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார் என்பதும் பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments