விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய 40 பேர்களுக்கு கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல்

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவ கண்காணிப்பில் இருந்த ஒருவர் திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பித்து விபத்தில் சிக்கினார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த 40 பேரையும் மருத்துவ கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர் மருத்துவமனை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் டாக்டர்கள் அசந்த நேரம் பார்த்து அந்த நபர் திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடினார். அவ்வாறு அவர் ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென சாலையில் விபத்தில் சிக்கி காயமடைந்தார்.

விபத்தில் சிக்கிய நபர் கொரோனா வைரஸ் கண்காணிப்பில் இருப்பவர் என்பது தெரியாமல் அவரை காப்பாற்ற சிலர் முன்வந்தனர். ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்

இந்த நிலையில் விபத்துக்குள்ளானவரின் உறவினர்கள் வந்து விபத்தில் காயமடைந்தவர் ஏற்கனவே கொரோனா வைரஸ் கண்காணிப்பில் இருப்பவர் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து விபத்தில் சிக்கியவரை காப்பாற்றியவர்கள், ஆம்புலன்ஸில் ஏற்றியவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர், சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் ஆகிய 40 பேருக்கும் வைரஸ் பரவி உள்ளதா என்பதை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

பிணத்தை வைத்துக்கொண்டு 45 நிமிடங்களாக காரில் சுற்றிய இந்திய இளைஞர் – வழக்கு விசாரணை

ஐக்கிய அரபு நாட்டில் கடந்த ஜுலை மாதத்தில் 27 வயதான இந்தியர் ஒருவர் தன் காதலியைக் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறையினர்களால் கமலஹாசன் துன்புறுத்தபாடுகிறாரா? அதிர்ச்சி தகவல்

காவல்துறையினரால் கமலஹாசன் துன்புறுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் மூன்றாவது உயிர் பலி!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டு மும்பை கஸ்தூரிபா மருத்து

கொரோனா பீதியால் தென்னந்தோப்புக்கு மாறிய ஐடி அலுவலகம்: சுவாரஸ்ய தகவல் 

கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகமெங்கும் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிசெய்ய அறிவுறுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பீதி: முட்டை விலை படுவீழ்ச்சி

இந்தியா உள்பட உலகின் 100 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும்