அமெரிக்காவில் சரமாரி துப்பாக்கிச்சூடு… 10 பேர் பரிதாப பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலிலும் அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் மேற்கு கொலரடோ மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
டென்வர் அடுத்த பூல்டர் எனும் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மர்மநபர் ஒருவர் நேற்று சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு உள்ளார். இதனால் அந்த மார்க்கெட்டில் இருந்த பலரும் அலறி அடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்து உள்ளனர். ஆனால் இந்த களேபரத்தில் சிக்கி 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எரிக் டாலி பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் அதிகாரி ஒருவரும் உயிரிழந்து உள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் தற்போது அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்ணடாட்டம், கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் தற்போது நிறபேதம், துப்பாக்கிச் சூடு போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
This is the booking photo of the #BoulderShooting suspect Ahmad Al Aliwi Alissa pic.twitter.com/mAUVq9WBfx
— Boulder Police Dept. (@boulderpolice) March 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments