மீடூ விவகாரம்: இயக்குனர் சுசி கணேசன் நஷ்ட ஈடு கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,October 22 2018]

கடந்த சில நாட்களாக மீடூவில் பாலியல் குற்றச்சாட்டுக்களை நடிகைகள் உள்பட திரையுலகை சேர்ந்த பெண்கள் பிரபலங்கள் மீது சுமத்தி வருவதால் தமிழ் திரையுலகே பரபரப்பில் உள்ளது. அவ்வாறு மீடூ குற்றச்சாட்டில் சிக்கியவர்களில் ஒருவர் பிரபல இயக்குனர் சுசி கணேசன்

இயக்குனர் சுசிகணேசன் மீது கவிஞர் லீலா மணிமேகலை சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதும் அதனை சுசிகணேசன் மறுத்ததையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் மீடூ விவகாரத்தில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கோரி இயக்குநர் சுசி கணேசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

ஏற்கனவே தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய வின்டா நந்தாவிடம் ரூ.1 நஷ்டஈடு கேட்டு பாலிவுட் நடிகர் அலோக் நாத் நீதிமன்றத்தில் அவதூறு தொடர்ந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே