உங்க வேலை எதுவோ அதை பாருங்க: 56 வயது நபருடன் உறவு குறித்து நடிகையின் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
56 வயதான முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியுடன் நெருக்கமாக இருப்பதாக நடிகை சுஷ்மிதாசென் குறித்த செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்த அவர் ’உங்கள் வேலையை பாருங்கள்' என்று நடிகை சுஷ்மிதா சென் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை சுஷ்மிதாசென் உடன் டேட்டிங்கில் இருப்பதாக முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் கூடிய பதிவு செய்தார். இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று வதந்தி பரவியது.
இந்த நிலையில் இது குறித்து சற்று முன்னர் நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ’நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன், திருமணம் செய்யவில்லை, மோதிரங்கள் மாற்றவில்லை, எந்தவித நிபந்தனையுமின்றி அன்பால் சூழப்பட்டு இருக்கிறேன்'.
ஏற்கனவே போதுமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது நான் மீண்டும் எனது அன்றாட பணிக்கு திரும்பியுள்ளேன். எப்போதும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்பவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களுக்கு NOYB (None of your business) உங்கள் வேலை எதுவோ அதை பாருங்கள் என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments