close
Choose your channels

பெற்றால்தான் பிள்ளையா? பிரபல நடிகையின் செயலை கொண்டாடும் ரசிகர்கள்!

Thursday, July 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்துவருபவர் நடிகை சுஷ்மிதா சென். இவருடைய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களை அவரை பாராட்டி வருகின்றனர்.

1994 இல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென் பின்னர் மகேஷ் பட் நடித்திருந்த ‘தஸ்தக்’ திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் கடந்த 1996 இல் அறிமுகமானார். தொடர்ந்து பிரவீன்காந்த இயக்கத்தில் வெளியான ‘ரட்சகன்’ திரைப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவிற்கு வரவேற்பை பெற்றார்.

அதேபோல பாலிவுட்டிலும் ‘பிவி நம்பர் ஒன்’, ‘ஆனகென்‘, ‘மைன் ஹுன் நா‘, ‘மைனே பியார் கியூன் கியா‘ போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமானார். இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளாமலேயே நடிகை சுஷ்மிதா சென் தனது 24 வயதில் ரெனீ என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்தார். பின்பு பத்தாண்டுகளுக்கு பிறகு 2010 இல் அலீசா என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டார்.

இதையடுத்து திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்துவரும் நடிகை சுஷ்மிதா சென் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வபோது சமூகவலைத் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுவந்தன.

மேலும் 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்த பத்திரிக்கையாளர்கள் அவரிடம் பலமுறை கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்குப் பதிலளித்த நடிகை சுஷ்மிதா திருமணத்திற்காக பல முயற்சிகள் நடந்தன. ஆனால் 3 முறை முயற்சித்தும் வெற்றிப் பெறவில்லை. நல்ல வேளையாக நான் அதிலிருந்து தப்பித்துக் கொண்டேன்.

எனது திருமணத்திற்கும் என்னுடைய இரு மகள்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. முன்னதாக என்னுடைய வாழ்வில் இருந்த ஆண் நண்பர்களை அவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் ஈபிள் டவருக்கு சென்ற நடிகை சுஷ்மிதா சென் தன்னுடைய மகள் அலிசாவுடன் கொஞ்சி விளையாடி நடனம் ஆடியிருக்கிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் உங்களால் எப்படி முடிகிறது?, உங்களது செயல் எங்களது இதயத்தை திருடிவிட்டது… நீங்கள் ராணி என்று பலவாறு பாராட்டி வருகின்றனர்.

மேலும் நடிகை சுஷ்மிதா சென்னும் அவருடைய மகள் அலிசாவும் விளையாடும் வீடியோ பதிவிற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment