சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் கைது: பாலியல் விவகாரத்தில் உடந்தையா?

சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா என்பதும், அவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சுசில்ஹரி பள்ளியில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர் என்பதும் அவரது ரகசிய தனி அறையை கண்டுபிடித்து அந்த அறைக்கு சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி சிவசங்கர் பாபாவின் மூன்று பெண் பக்தர்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்தனர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த மூவரில் ஒருவரான சுஷ்மிதா என்ற பெண் பக்தர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாலியல் விவகாரத்தில் சிவசங்கர் பாபாவுக்கு பெண் பக்தர் சுஷ்மிதா உடந்தையாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கை மேலும் தொடரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

விவாகரத்தாகி 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த நட்சத்திர ஜோடி!

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடி விவாகரத்து பெற்று 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து ஒருவருக்கொருவர் திருமண நாள் வாழ்த்துக்களைக் கூறி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

உலகின் 3 ஆவது பெரிய வைரம் கண்டுப்பிடிப்பு… எடையைக் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்…

தென் ஆப்பிரிக்கா நாடான போஸ்வானா நாட்டில் தற்போது உலகின் 3 பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

'தளபதி 65' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 65' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

டெல்லியில் தோனியை சந்தித்த தமிழக அமைச்சர்: வைரல் புகைப்படம்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று டெல்லி சென்றார் என்பதும் அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கு தேவையானவற்றை வலியுறுத்தினார் என்பதும் தெரிந்ததே.

13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுவிஸ் வங்கியில் குவிந்த இந்தியர்களின் பணம்!

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய வங்கி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியர்களின் பணம் அந்நாட்டு வங்கிகளில் குவிந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.