சுஷாந்த்சிங்கை கொலை செய்துவிட்டார்கள்: தாய்மாமா சந்தேகம் எழுப்பியதால் பரபரப்பு
- IndiaGlitz, [Monday,June 15 2020]
சுஷாந்த் சிங் தற்கொலை செய்யவில்லை என்றும் அவரை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்றும் அவரது தாய் மாமா சந்தேகம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங்கின் மரணம் பாலிவுட்டை கதிகலங்க வைத்துள்ள நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். சுஷாந்த்சிங் எழுதிய தற்கொலை கடிதம் எதுவும் இல்லை என்பதும் சுஷாந்த்சிங்கின் மொபைல் போனில் தற்கொலைக்கான எந்தவித காரணமும் இல்லை என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
மேலும் மன அழுத்தம் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த போதிலும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவர் கோழை இல்லை என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை தனது தனக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சுஷாந்த்சிங்கின் தாய்மாமா சந்தேகம் எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் ’சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இருக்க வாய்ப்பே இல்லை என்றும் அப்படிப்பட்ட நபர் அவர் இல்லை என்றும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது மரணத்தில் மிகப் பெரிய மர்மம் இருப்பதாக தான் சந்தேகப்படுவதாகவும் கூறியுள்ளார்
சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருந்தால் அவரை கொலை செய்தவர் யார் என்பது குறித்து போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சுஷாந்த்சிங் தாய் மாமாவின் இந்த சந்தேகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் சுஷாந்த்சிங்கிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆனால் மும்பை போலீசார் இதுகுறித்து கூறியபோது கொலைக்கான எந்தவிதமான தடயமும் இல்லை, அவர் தற்கொலை தான் செய்து கொண்டிருப்பதாகவும், தற்கொலைக்கான காரணம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
We don’t think he committed suicide, police must investigate the matter. There seems to be a conspiracy behind his death. He has been murdered: Maternal uncle of #SushantSinghRajput, outside Sushant's residence in Patna, Bihar. (14.06.2020) pic.twitter.com/aUO80KNZdf
— ANI (@ANI) June 15, 2020