சுஷாந்த்சிங் இறுதி சடங்கின்போது சோகத்தில் உயிரிழந்த சகோதரர் மனைவி: அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தான் தங்கியிருந்த வீட்டில் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமர் முதல் அனைவரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் சுஷாந்த் சிங் இறுதிச் சடங்கு நேற்று மும்பையில் நடைபெற்றது. இதற்காக விமானம் மூலம் சுஷாந்த் சிங் தந்தை உள்பட உறவினர்கள் ஒரு சிலர் மும்பைக்கு வந்து இருந்தனர். அவர்கள் முன்னிலையில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மும்பையில் இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பீகாரில் சுஷாந்த் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரரின் மனைவி சுதாதேவி என்பவர் மரணம் அடைந்தார். அவர் சுஷாந்த் சிங் இறந்த செய்தி கேட்டதில் இருந்தே மன வருத்தத்தில் இருந்ததாகவும், அவர் கடந்த இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறதே. இதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுதாதேவி மரணமடைந்தார்.

மும்பையில் ஒரு பக்கம் சுஷாந்த் சிங் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இன்னொரு புறம் அவருடைய சகோதரரின் மனைவி மரணமடைந்தது அக்குடும்பத்தினர்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.