சுஷாந்த் சிங்கின் 50 நிறைவேறாத ஆசைகள்: அவரே கைப்பட எழுதியது
- IndiaGlitz, [Monday,June 15 2020]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை பெரும் மர்மமாக இருந்தாலும் அவரது மரணம் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதத்தை போலீசார் தேடிய போது கிடைத்த ஒரு சில விஷயங்களில் அவரே கைப்பட எழுதிய 50 ஆசைகள் குறித்த பேப்பர்கள் கிடைத்துள்ளதாம். அதில் அவர் தனது கைப்பட தனது 50 ஆசைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த ஆசைகள் குறித்து தற்போது பார்ப்போம்.
தனது வாழ்நாளில் 100 குழந்தைகளையாவது தனது சொந்த செலவில் நாசாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும், செயற்கை நுண்ணறிவில் துறையில் பணியாற்ற வேண்டும், பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுத் தர வேண்டும், குழந்தைகளுக்கு யோகா, நடனம் உள்ளிட்டவற்றை கற்றுத் தர வேண்டும்.
லம்போர்கினி காரை வாங்க வேண்டும், விமானத்தை இயக்க கற்றுக் கொள்ள வெண்டும், சாம்பியனுடன் டென்னிஸ் விளையாட வேண்டும், குறைந்தது 1000 மரங்களை நட வேண்டும், அன்டார்டிகாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும், ஐரோப்பா முழுவதும் ரயில் மூலம் பயணம் செய்ய வேண்டும், கிரிக்கெட் போட்டியை இடது கையால் விளையாட வேண்டும், யோகாவை கற்றுக் வேண்டும், எரிமலை தீப்பற்றி எரியும் போது அதை புகைப்படம் எடுக்க வேண்டும்.
10 வகை நடனத்தை கற்று கொள்ள வேண்டும். விவசாயம் செய்வது எப்படி என தெரிந்து கொள்ள வேண்டும். வில் வித்தை, சாம்பியனுடன் செஸ் விளையாட வேண்டும்’ என்று அவருடைய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சுஷாந்த் சிங்கின் இந்த நிறைவேறாத ஆசைகள் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.