தனுஷூக்கு இருந்த பிரச்சனை சுஷாந்த் சிங்கிற்கு இருந்ததா? பிரபல எழுத்தாளர் அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,June 16 2020]

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரை உலகையே குலுக்கியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் எழுத்தாளரும், சுஷாந்துக்கு நெருக்கமானவருமான சுகரித்தா செங்குப்தா என்பவர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே மனநிலை சரியில்லாமல் சுஷாந்த் மன அழுத்தத்துடன் இருந்ததாகவும், அதனால் தான் அவரது காதலி ரேஹா அவரை விட்டு விலக நேரிட்டதாகவும் கூறினார்

சில சமயம் சுஷாந்த் சிங் மன சோர்வை வெளிப்படுத்துவார் என்றும் அதற்காக அவர் மருத்துவரை சந்தித்து மருந்துகளை வாங்கிக் கொண்டாலும் மருந்துகளை சரியாக எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த நோயை மருந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று காதலி ரேஹா உள்பட பலர் வற்புறுத்தியும் சுஷாந்த் சிங், யார் பேச்சையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்

மருந்துகள் தொடர்ச்சியாக சாப்பிடாததால் அவரது மன அழுத்தம் அதிகரித்து இருந்ததாகவும் கடந்த ஒரு வருடமாகவே சுஷாந்த் சிங் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டார் என்றும் ரேஹா மட்டுமே தொடர்பு இருந்ததாகவும் கூறியுள்ளார்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’3’ படத்தில் தனுஷின் கேரக்டர் இவ்வாறுதான் அமைக்கப்பட்டிருக்கும். அந்த கேரக்டருக்கு பல குரல்கள் கேட்க தொடங்கியதால் எங்கே தான் தன்னுடைய மனைவியையே கொலை செய்து விடுவோமோ என்று பயந்து தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்வது போன்று அந்த படம் முடிக்கப்பட்டிருக்கும். அதேபோல் சுஷாந்த் சிங்கிற்கு சிலசமயம் பல குரல்கள் கேட்கத் தொடங்கியதாகவும் அந்தக் குரல்கள் அவரை கொலை செய்ய முயற்சிப்பதை அவர் உணர தொடங்கியதாகவும் எழுத்தாளர் சுகரித்தா செங்குப்தா கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங்கிற்கு பல குரல்கள் கேட்டதால் ஏற்பட்ட மன அழுத்தமே அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் எழுத்தாளர் சுகரித்தா செங்குப்தா கூறியுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

உறவினரின் வளைகாப்புக்கு புதுவை சென்று வந்த சென்னை நபர் கொரோனாவுக்கு பலி!

புதுவையில் உள்ள உறவினர் வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது 

லடாக் தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலி: 11 வீரர்கள் காயம் என தகவல்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு நடந்த தாக்குதல் ஒன்றில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தியையும் அதில் ஒருவர் இராணுவ அதிகாரி

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்தவர்களில் ஒருவர் தமிழர்: அதிர்ச்சி தகவல்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு திடீரென சீன துருப்புகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு ராணுவ வீரர்களும் வீரமரணம்

லடாக்கில் சீன ராணுவம் திடீர் தாக்குதல்: 3 இந்திய ராணுவத்தினர் வீரமரணம்

கடந்த சில வாரங்களாகவே இந்திய-சீன எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதும், பதிலடியாக

தந்தைக்கு முடிவெட்டி காசு வாங்கி கொண்ட தமிழ் திரைப்பட ஹீரோ

கொரோனா வைரஸ் பதட்டம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.