சுஷாந்த் மரணத்தை அடுத்து கவனம் பெறும் அவரது முன்னாள் பெண் மேலாளர் தற்கொலை: பரபரப்பு தகவல் 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சில நிமிடங்களுக்கு முன்பு அவரது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட்டை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் அதாவது ஜூன் 8ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்களிடம் மேனேஜராக இருந்த திஷா சலியன் என்ற இளம்பெண் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்களும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது முன்னாள் மேனேஜரின் தற்கொலை வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது

திஷா சலியன் தற்கொலை வழக்கின் விசாரணையில் அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகி இருந்ததாகவும், இந்த நிலையில் திடீரென அவர் திடீரென 14வது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்தது. திஷாவின் தற்கொலையின் பரபரப்பு முடியும் முன்னரே தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையும் நடந்துள்ளதால் இந்த இரண்டு தற்கொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது

More News

சுஷாந்த் மரணம்: தற்கொலை கடிதம் குறித்து மும்பை போலீஸ் அறிக்கை 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் சற்று முன் தற்கொலை செய்துகொண்டார் என்ற அதிர்ச்சி செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக

எம்.எஸ்.தோனி பட ஹீரோ திடீர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்

தல என்று அன்புடன் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி கேரக்டரில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

கொரோனா, வேலையின்மை, வாடகை பிரச்சனை: சென்னையை காலி செய்யும் பொதுமக்கள்

சொந்த ஊரில் வேலை இல்லை, வருமானம் இல்லை என்றால் அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது சென்னைதான். சென்னை சென்றால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா: இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதால் விபரீதம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 19 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது என்பதும் இந்த 19 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

அம்மாவுக்கு கொரோனா: பிரதமர், முதல்வரிடம் உதவி கேட்ட பிரபல நடிகை

பிரபல நடிகை ஒருவர் தனது தாயாருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு முதல்வர் மற்றும் பிரதமர் உதவி செய்ய வேண்டும் என்றும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளது