சுஷாந்த் மரணத்தை அடுத்து கவனம் பெறும் அவரது முன்னாள் பெண் மேலாளர் தற்கொலை: பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சில நிமிடங்களுக்கு முன்பு அவரது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட்டை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் அதாவது ஜூன் 8ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்களிடம் மேனேஜராக இருந்த திஷா சலியன் என்ற இளம்பெண் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்களும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது முன்னாள் மேனேஜரின் தற்கொலை வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது
திஷா சலியன் தற்கொலை வழக்கின் விசாரணையில் அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகி இருந்ததாகவும், இந்த நிலையில் திடீரென அவர் திடீரென 14வது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்தது. திஷாவின் தற்கொலையின் பரபரப்பு முடியும் முன்னரே தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையும் நடந்துள்ளதால் இந்த இரண்டு தற்கொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout