சுசீந்திரன் -விஷ்ணு படத்தின் வித்தியாசமான டைட்டில்

  • IndiaGlitz, [Friday,July 15 2016]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை இன்று நடிகர் விஷால் வெளியிடவுள்ளார் என்று வெளியான செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'மாவீரன் கிட்டு' என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலில் இருந்தே இதுவொரு பீரியட் படம் என்பதை குறிப்பதாக தெரிகிறது. எனினும் படக்குழுவினர்களிடம் இருந்து இதுகுறித்த அறிவிப்பு வரும் வரை பொறுமை காப்போம்.
விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும், அனல் அரசு ஸ்டண்ட் இயக்குனராகவும் பணிபுரிகின்றனர். நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் ஆசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றான்.

More News

'ரெமோ' படத்தின் புத்திசாலித்தனமான ரிலீஸ் தேதி

ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் எந்த அளவு புத்திசாலித்தனம் இருக்கின்றதோ, அதேபோல் அந்த படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதிலும் படக்குழுவினர்...

ரஜினி பட வதந்திக்கு மறுப்பு தெரிவித்த பிரபல நடிகை

கோலிவுட் திரையுலகில் அனுபவம் வாய்ந்த சீனியர் நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் ரம்யாகிருஷ்ணனுக்கு 'பாகுபலி' படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது...

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு பட ஹீரோயின் அதிகாரபூர்வ அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' என்ற சூப்பர் ஹிட் படத்தை அடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'அகிரா'...

நேற்று 'மொட்டசிவா கெட்டசிவா', இன்று 'சிவலிங்கா'

கோலிவுட் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா'...

நடிகை சமந்தாவின் தப்பாத 'தெறி' கணக்கு

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை சமந்தா நடித்த 'கத்தி', தெறி' மற்றும்...