அஜித்தை போலவே விஜய்யுடனும் இணைந்து வெற்றி பெறுவோம். சுசீந்திரன்

  • IndiaGlitz, [Wednesday,August 23 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக இயக்குனர் அட்லி, சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவின் போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 'மெர்சல்' படத்திற்கு போட்டியாக இயக்குனர் சுசீந்திரன் தனது 'நெஞ்சிலே துணிவிருந்தால்' படத்தை அதே தீபாவளி தினத்தில் வெளியிடுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

இந்த செய்திக்கு சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'எங்களுடைய 'நெஞ்சிலே துணிவிருந்தால்' திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம். அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். நாங்கள் மெர்சலை எதிர்த்து வரவில்லை, மெர்சல் உடன் வருகிறோம்.

2013, பாண்டியநாடு திரைப்படம் அஜித் சார் படம் ஆரம்பத்துடன் வெளியிட்டோம். ஆரம்பம் படமும் வெற்றி பெற்றது, எங்கள் படமும் வெற்றி பெற்றது' என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

More News

அல்வா வாசு குடும்பத்திற்கு விஷால் செய்த உதவி

சமீபத்தில் மரணம் அடைந்த நகைச்சுவை நடிகர் அல்வா வாசு அவர்களின் குடும்பத்தினர் வறுமையின் பிடியில் இருப்பதால் அவரது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவருடைய குழந்தைகளின் படிப்பு செலவிற்கு நடிகர் சங்கம் உதவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன...

இன்று முதல் ஷங்கரின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

புளூவேல் கேமிற்கு அடிமையான சென்னை கல்லூரி மாணவி: 7வது மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு

சிறுவர், சிறுமிகளின் உயிர்களை பறிக்கும் ஆபத்தான் ஆன்லைன் கேம் புளுவேல் கேம் என்பதும் இந்த ஆபத்தான விளையாட்டால் சமீபத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பலியானார் என்று வெளிவந்த செய்தியையும் சமீபத்தில் பார்த்தோம்...

நான் முதல்வராக கூட வாய்ப்பு உள்ளது: நாஞ்சில் சம்பத்

அதிமுகவின் இரண்டு அணிகள் இணைந்தால் ஆட்சி மேலும் வலுப்பெறும் என்று அனைவரும் நினைத்த நிலையில் தற்போதுதான் ஆட்சிக்கு மேலும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அஜித்திடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது: 'விவேகம்' கலை இயக்குனர் மிலன்

ஒரு சர்வதேச உளவாளி படத்தை சர்வதேச தரத்துடன் காட்சியில் கொண்டு வருவது அவ்வளவு எளிது இல்லை. சர்வதேச தரத்தை கொண்டுவர கதைக்கு தகுந்தவாறும் கேரக்டர்களுக்கு தகுந்தவாறும் தொழில்நுட்ப கலைஞர்களின் அதிகபட்ச உழைப்பு தேவைப்படும்.