சுசீந்திரனின் அடுத்த விளையாட்டு இன்று முதல் ஆரம்பம்

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

தமிழ் திரையுலகில் விளையாட்டு சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான திரைப்படங்களான 'வெண்ணிலா கபடிக்குழு' மற்றும் 'ஜீவா' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்' தற்போது இவர் 'வெண்ணிலா கபடிக்குழு 2' என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் மற்றொரு விளையாட்டு சம்பந்தமான படம் ஒன்றை இன்று அவர் தொடங்கியுள்ளார். 'சாம்பியன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது

இந்த படம் முழுக்க முழுக்க கால்பந்து போட்டிகளை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் ரோஷன் என்ற புதுமுகம் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் 'அஞ்சாதே' புகழ் நரேன், ஜிகே ரெட்டி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். மிர்ணாளினி என்ற புதுமுகம் இந்த படத்தின் நாயகியாக அறிமுகமாகிறார். இந்த படம் வரும் டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பபட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றதை அடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன என்பதும், இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தூத்துகுடி துப்பாக்கி சூடு: ரஜினிகாந்த் நிவாரண உதவி அறிவிப்பு

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தையும் காயம் அடைந்தவர்களையும் சந்திக்க இன்று ரஜினிகாந்த் தூத்துகுடி சென்றுள்ளார். தூத்துகுடி விமான நிலையத்தில் இருந்து அவர் தற்போது

பின்னால் பார்த்து கொண்டே போனால் முன்னேற முடியாது: தூத்துகுடி செல்லும் முன் ரஜினி பேட்டி

சமீபத்தில் நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 அப்பாவிகள் பலியான நிலையில் இன்று பலியானவர்களின் குடும்பத்தினர்களை சந்திக்கவும்,

பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா.சீனிவாசன் காலமானார்

பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 88

'காலா' படத்திற்கு கர்நாடகா தடை: 

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

தூத்துகுடி செல்கிறார் ரஜினிகாந்த்

சமீபத்தில் தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடிய அந்த பகுதி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் அப்பாவிகள் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.