சுசீந்திரனுடன் மீண்டும் இணையும் கார்த்தி

  • IndiaGlitz, [Saturday,June 10 2017]

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை கார்த்தியின் சகோதரர் சுர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் நேற்று வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சுசிந்திரனுடனும் அவர் இணையவுள்ளார்.

ஆம், சுசீந்திரன் இயக்கிய 'அறம் செய்து பழகு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வரும் 12ஆம் தேதி மாலை 4.05மணிக்க்கு கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். இதுகுறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளிவந்துள்ளது. கார்த்தி ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய 'நான் மகான் அல்ல' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

விக்ராந்த், சந்தீப் கிஷான், மெஹ்ரின் பிர்ஜதா, ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி உள்பட பலர் நடித்துள்ள 'அறம் செய்து பழகு' படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவில் காசி விஸ்வாதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

More News

இயக்குனர் பிரியத்ர்ஷனுடன் மீண்டும் இணையும் சமுத்திரக்கனி

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'மஹேஷிண்டே பிரதிகாரம்' என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார் என்றும், இந்த படத்தில் ஃபகத்பாசில் வேடத்தில் உதயநிதி நடிக்கவுள்ளதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

சச்சினுக்கு 12ஆம் வகுப்பு மாணவி எழுதிய நெகிழ்ச்சியான கடிதம்

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சினை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

சிவகார்த்திகேயன் - பொன்ராம் படம் தொடங்கும் தேதி?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கி வந்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதையும், இந்த படத்தின் பேட்ச்வொர்க் மட்டுமே இன்னும் 10 நாட்களுக்கு உள்ளது என்பதையும் நேற்று பார்த்தோம்.

திமுக எம்.எல்.ஏக்கள் திடீர் கைது! அரசு விழாவில் பங்கேற விடாமல் செய்த போலீசார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட விழாவில் பங்கேற்க முயன்ற திமுக எம்.எல்.ஏக்களை கைது செய்து அந்த விழாவில் பங்கேற்க விடாமல் செய்த புதுக்கோட்டை போலீசாரின் நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

வங்கிக்கணக்கு, ரேசன் கார்டு, கேஸ் இணைப்பு உள்பட பல்வேறு ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.