மாவீரன் கிட்டு' உருவாக காரணம் என்ன? சுசீந்திரன் வெளியிட்டுள்ள தகவல்

  • IndiaGlitz, [Wednesday,November 30 2016]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய 'மாவீரன் கிட்டு' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் உருவாக என்ன காரணம் என்பதை சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
'சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஒரு ரசிகர் என்னிடம் உரிமையாக, 'சார் ஒரு தமிழனா நாங்க எல்லாம் பெருமைபடுகிற மாதிரி ஒரு படம் பண்ணுங்க' என்றார். அன்று முதல் பல நேரங்களில் அவர் கூறிய அந்த வார்த்தை என்னை யோசிக்க வைத்தது.
மாவீரன் கிட்டு' இந்திய சினிமாவில் மிகவும் ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். நான் ஒரு தமிழனாய் இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கு பெருமை கொள்கிறேன். இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த அந்த ரசிகருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
'மாவீரன் கிட்டு' படத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி, ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

More News

நாடா புயல் எதிரொலி. சென்னை உள்பட 5 கடலோர மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'நாடா' புயல் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் கனமழை...

ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல். 2 இந்திய வீரர்கள் வீரமரணம்

இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று அதிகாலை...

ரூ.500 செலவில் திருமணம் செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ரூ.500 கோடி செலவில் தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வைத்தார்...

திரை அரங்குகளில் தேசிய கீதம். சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

இந்தியா முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் தற்போது புகை பிடிப்பதன் தீங்கு குறித்த விழிப்புணர்வு விளம்பரம் திரையிடப்பட்டு...

தமிழகத்தை நோக்கி வரும் 'நாடா' புயல். சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு அது புயலாக உருவாகியுள்ளதால் டிசம்பர் 2 முதல்...