சுசீந்திரனின் ''வில் அம்பு'' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Sunday,February 07 2016]

'வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனரான சுசீந்திரன் அதன்பின்னர் நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வில் அம்பு' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ, ஹரிஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நவீன் இசையமைத்துள்ளார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். சுசீந்திரன் தயாரிப்பில் வெளியான 'ஜீவா' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 'வில் அம்பு' படமும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News