தமிழக அரசின் திரைப்பட விருது: இயக்குனர் சுசீந்திரன் வருத்தம்

  • IndiaGlitz, [Friday,July 14 2017]

கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழக அரசு திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்த நிலையில் நேற்று மொத்தமாக 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த விருது அறிவிப்பில் கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட முக்கிய நடிகர்களின் படங்கள் இடம்பெறாத நிலையில் இந்த விருது அறிவிப்புக்கு பிரபல இயக்குனர் சுசீந்திரன் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு விருதுகள் அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

இதில் என்னுடைய படங்களை எந்த விருதிற்கும் தேர்வு செய்யப்படாததிற்கு தேர்வு குழுவினர்களுக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக தேசிய விருது பெற்ற 'அழகர்சாமியின் குதிரை' மற்றும் அனைவராலும் பாராட்டை பெற்ற 'நான் மகான் அல்ல கிளைமாக்ஸ் ஃபைட்டுக்கு அனல் அர்சுவை தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

விருதுகள் பெற இருக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.