கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தை கையில் எடுத்துள்ள சுசீந்திரன்

  • IndiaGlitz, [Friday,March 30 2018]

விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட கதையுடன் கூடிய தமிழ்ப்படங்கள் வெகு அரிதாகவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கபடியை மையமாக வைத்து 'வெண்ணிலா கபடிகுழு மற்றும் கிரிக்கெட்டை மையமாக வைத்து 'ஜீவா' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்

தற்போது கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக ரோஷன் என்பவர் நடிக்கிறார் .கதாநாயகனின் இளம்  பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார் . இவர் ஏற்கனவே  சுசீந்திரன் இயக்கிய ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த படத்திற்கு யுவன்ஷங்கர்  ராஜா இசையமைக்கவுள்ளார். 'ஆதலால் காதல் செய்வீர்' படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுடன் மீண்டும் சுசீந்திரன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்க நிஜ கால்பந்தாட்ட வீரர்களை இயக்குனர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார்

More News

7 நாடுகளின் படங்களை பின்னுக்கு தள்ளிய தளபதியின் 'மெர்சல்'

பிரிட்டனின் 4வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 'மெர்சல்' திரைப்படத்திற்கு சிறந்த வெளிநாட்டு மொழி படப் பிரிவில் விருது கிடைத்துள்ளது

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த கமல்

ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமயமலை சென்றபோது காவிரி பிரச்சனை குறித்த கேள்விகளை தவிர்த்துவிட்டு நழுவி சென்றார். இதுகுறித்து கமல் கூறியபோது 'அவர் , பல விஷயங்களில் நழுவித்தான் செல்கிறார்'

கியாரே செட்டிங்கா? காலா பட வசனத்தை கலக்கலாக பேசிய தல தோனி

ஐபிஎல் திருவிழா இன்னும் ஒருசில நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இரண்டு ஆண்டு தடைக்கு பின் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புத்துணர்ச்சியுடன் இந்த ஆண்டு களத்தில் இறங்கவுள்ளது.

மீண்டும் இணையும் இயக்குனர் விஜய் - ஜிவி பிரகாஷ்! ஆனால்....

இயக்குனர் விஜய் இயக்கிய முதல் படமான 'கிரீடம்' படம் முதல் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தது ஜி.வி.பிரகாஷ்தான் என்பது தெரிந்ததே.

தாஜ்மஹாலில் இனி 3 மணி நேரம் மட்டுமே! சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

உலக அதிசங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதுண்டு.