'மார்கழி திங்கள்' படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய லைட்மேன்..!

  • IndiaGlitz, [Wednesday,May 31 2023]

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்கழி திங்கள்’. இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பின் போது ஒரு ஏற்பட்ட விபத்து குறித்து சுசீந்திரன் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ‘பழனி அருகே உள்ள கிராமத்தில் ’மார்கழி திங்கள்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென புயல் காற்று மற்றும் கன மழை பெய்தது. சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட மிகப்பெரிய கேமராவை அங்குள்ள தோட்டத்தில் வைத்து படமாக்கி கொண்டிருந்தோம். அப்போது திடீரென எதிர்பாராத புயல் மற்றும் மழை வந்ததை அடுத்து நாங்கள் அனைவரும் மிகுந்த சிரமப்பட்டோம் படப்பிடிப்பு ஸ்தம்பித்தது.

சென்னையில் இருந்து கொண்டு வந்திருந்த பெரிய பெரிய லைட்டுகள் எல்லாம் கீழே விழுந்து விட்டது, ஒரு லைட் மீது இடி விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த லைட்மேன் உயிர் தப்பினார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தனர்’ என்று கூறினார். மேலும் இதுகுறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

ஐபிஎல் ஃபைனல் பார்வையாளர்கள்: ஜியோ சினிமா சாதனை..!

நேற்று அதிகாலை நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியபோது ஜியோ சினிமா தளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை சாதனை படைத்துள்ளது. 

நடிகை சாய் பல்லவி மீது எனக்கு கிரஷ்? மனம் திறந்த பாலிவுட் பிரபலம் பற்றிய சுவாரசிய தகவல்!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நடிகை சாய்பல்லவி மீது தனக்கு கிரஷ் இருப்பதாக பாலிவுட் நடிகர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்

நான் பொய் சொல்ல விரும்பவில்லை, எனக்கும் முதலமைச்சர் ஆசை உள்ளது: பிரபல தமிழ் நடிகர்..!

எனக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை உள்ளது, முதலமைச்சர் ஆசை இல்லை என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை

ஒரு கொலைகாரனை தெரிஞ்சுகிடனும்னா, அவனோட கொலையை படிக்கணும்: 'போர் தொழில்' டிரைலர்..!

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ’போர் தொழில்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி

யாரெல்லாம் இதை பார்த்தவுடன் Rotate செய்தது? சமந்தா புகைப் படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை யாரெல்லாம் Rotate செய்து பார்த்தது