'மார்கழி திங்கள்' படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய லைட்மேன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்கழி திங்கள்’. இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பின் போது ஒரு ஏற்பட்ட விபத்து குறித்து சுசீந்திரன் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ‘பழனி அருகே உள்ள கிராமத்தில் ’மார்கழி திங்கள்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென புயல் காற்று மற்றும் கன மழை பெய்தது. சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட மிகப்பெரிய கேமராவை அங்குள்ள தோட்டத்தில் வைத்து படமாக்கி கொண்டிருந்தோம். அப்போது திடீரென எதிர்பாராத புயல் மற்றும் மழை வந்ததை அடுத்து நாங்கள் அனைவரும் மிகுந்த சிரமப்பட்டோம் படப்பிடிப்பு ஸ்தம்பித்தது.
சென்னையில் இருந்து கொண்டு வந்திருந்த பெரிய பெரிய லைட்டுகள் எல்லாம் கீழே விழுந்து விட்டது, ஒரு லைட் மீது இடி விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த லைட்மேன் உயிர் தப்பினார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தனர்’ என்று கூறினார். மேலும் இதுகுறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Lightning struck #MargazhiThingal sets near Palani today. Team escaped unhurt, but equipment damaged. @Dir_Susi thanks crew members for immense support@offBharathiraja #VennilaProductions @manojkumarb_76 @Shyam66465423 @maalu181 @gvprakash #KasiDinesh @KabilanVai @vasukibhaskar pic.twitter.com/79Rvf9K6Vm
— Imadh (@MSimath) May 31, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments