பிகில்-கென்னடி கிளப் படங்களின் கதைகள் ஒன்றா? சுசீந்திரன் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,August 12 2019]

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைக்கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் அதிகமாக உருவாகி வருகிறது. விஜய் நடித்துவரும் 'பிகில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'கென்னடி கிளப்', அருண் விஜய் நடித்துவரும் 'பாக்ஸர்' உள்பட பல விளையாட்டுக்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது

இந்த நிலையில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த படமாகும். அதேபோல் சசிகுமார், பாரதிராஜா நடிப்பில் சுசீந்திரன் இயக்கி உள்ள 'கென்னடி கிளப்' திரைப்படம் பெண்கள் கபடி விளையாட்டின் திரைப்படமாகும். இந்த இரண்டு திரைப்படங்களும் பெண்கள் விளையாட்டை மையமாக கொண்ட கதையம்சம் கொண்டவையாக இருப்பதாக் இரண்டு படங்களின் கதைகளும் ஒரே மாதிரியானவை என ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன

இது குறித்த செய்திக்கு இயக்குனர் சுசீந்தரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். நான் இயக்கியுள்ள 'கென்னடி கிளப்' திரைபடமும், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பிகில்' படத்தின் கதையும் பெண்கள் விளையாட்டுக்கு சம்பந்தப்பட்டது என்பதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. அந்தக் கதைக்கும் 'கென்னடி கிளப்' கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் 'பிகில்' டீமிடம் இருந்து எங்களுக்கு எந்தவித பிரஷரும் வரவில்லை என்று கூறி இந்த வதந்திக்கு சுசீந்திரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்