இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Saturday,May 04 2019]

'வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் இயக்குனராகி அதன் பின் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'கென்னடி கிளப்', 'வெண்ணிலா கபடிக்குழு 2', 'ஏஞ்சலினா', மற்றும் 'சாம்பியன்' ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவை அனைத்தும் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சுசீந்திரனின் தயாரிப்பில் உருவாகி படம் 'தோழர் வெங்கடேசன். சுசீந்திரன் இயக்கிய 'நான் மகான் அல்ல' படத்தில் உதவி இயக்குனராக இருந்த மகாசிவன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஹரிசங்கர் என்பவர் இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு சகிஷ்னா இசையமைத்துள்ளார். வேதாச்சலம் ஒளிப்பதிவில் மகாசிவன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத காதல் பிரச்சனை ஒன்று கூறப்பட்டுள்ளதாம். இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்றும், சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

More News

 பெண்கள் சலூனில் ஷேவிங் செய்த சச்சின் தெண்டுல்கர்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒருவர் சலூன் கடை நடத்தி வந்தார். ஆனால் திடீரென ஒருநாள் அவர் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்துவிட்டார்.

எரியும் நெருப்பில் குதித்த போலீஸ் அதிகாரி! சமூக வலைத்தளங்களில் வைரல்

தீ விபத்து ஒன்றில் வீடு ஒன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும்போது எரியும் வீட்டுக்குள் குதித்த காவல்துறை எஸ்.ஐ ஒருவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

அப்ரிடி ஒரு லூசு: கவுதம் காம்பீரின் காட்டமான பதிவு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அப்ரிடி சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் எப்போது?

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். காதலர் தினம் உள்பட ஒவ்வொரு முக்கிய தினங்களிலும்

 சம்பளம் எவ்வளவு? மனம் திறந்த யோகிபாபு

யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் லட்சக்கணக்கில் இருப்பதாக கோலிவுட்டில் கூறப்பட்டு வரும் நிலையில் தன்னுடைய சம்பளம் எவ்வளவு என்பதை