9 வருடங்களுக்கு முன் இதே ஜனவரி 29ல்...சுசீந்திரனின் மலரும் நினைவுகள்

  • IndiaGlitz, [Monday,January 29 2018]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய முதல் படமான 'வெண்ணிலா கபடிக்குழு கடந்த 2009ஆம் ஆண்டு இதே ஜனவரி 29ல் தான் வெளிவந்தது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை செய்தது. இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சூரி அடையாளம் காணப்பட்டார்

இந்த நிலையில் 9 வருடங்கள் கழித்து இன்று அதாவது அதே ஜனவரி 29ல் இயக்குனர் சுசீந்திரன் நடிகராக அவதாரம் எடுக்கும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இதுகுறித்து சுசீந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ஜனவரி 29, 2009 என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். அன்றுதான் என் முதல் படம் ரிலீஸ் ஆனது. அதேபோல் அதே ஜனவரி 29 இன்று ஒரு நடிகனாக என்னுடைய முதல் நாள் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. சுட்டுப்பிடிக்க உத்தரவு இயக்குனர் ராம்பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் மோகன் ஆகியோர்களுக்கு எனது நன்றி என்று தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை  கல்பத்ரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

More News

வரி ஏய்ப்பு விவகாரம் நடிகை அமலாபால் கைதாகி விடுதலை

சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் நடிகை அமலாபால், கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற கோல்டன் கோவிலில் நயன்தாரா

உலகப்புகழ் பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலில் நயன்தாரா சென்று வழிபட்டுள்ளார். கருப்பு நிற உடையில் தலையில் முக்காடு போட்டு அவர் பொற்கோவில் முன் நிற்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஹிட் தமிழ் ரீமேக் படத்தில் அக்சய்குமார்?

தமிழில் சூப்பர் ஹிட் ஆகி வரும் படங்கள் இந்தியிலும் ரீமேக் ஆகி வரும் நிலையில் தற்போது தமிழில் சூப்பர் ஹிட் ஆனதோடு, ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்த 'காஞ்சனா 2' திரைப்படமும் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

சமுத்திரக்கனியின் 'ஏமாலி' திரைமுன்னோட்டம்

ஏமாளி' என்ற தலைப்பிற்கு பதிலாக 'ஏமாலி' என்ற தலைப்பு வைத்துள்ளது குறித்து பலர் தன்னிடம் விளக்கம் கேட்டதாகவும், அதற்கான பதில் படத்தில் இருப்பதாகவும் இயக்குனர் துரை கூறியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்காதவர்களை நாட்டை விட்டு அனுப்பலாமா? கரு.பழனியப்பன்

எவன் எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க மாட்டானோ, அவனையெல்லாம் நாட்டை விட்டு அனுப்பிவிடுவோமா?