சுசீந்திரனின் 'கென்னடி கிளப்' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Wednesday,July 10 2019]

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. விஜய் நடித்த 'கில்லி' முதல் 'பிகில்' வரை பல ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் தமிழில் தயாராகி வரும் நிலையில் சுசீந்திரன் இயக்கி வரும் ஸ்போர்ட்ஸ் திரைப்படம் 'கென்னடி கிளப்

சுசீந்திரனின் முதல் படமான 'வெண்ணிலா கபடிக்குழு' போல் இதுவும் கபடி போட்டியை மையப்படுத்தியிருந்தாலும் இந்த படம் பெண்கள் கபடிப்போட்டி குறித்த கதையம்சம் கொண்ட படமாகும்

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

சசிகுமார், பாரதிராஜா, காயத்ரி, சூரி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது