சுசீந்திரனின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் கடந்த ஆண்டு இயக்கிய 'ஜீனியஸ்' திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது அவர் 'கென்னடி கிளப்', 'ஏஞ்சலினா' மற்றும் 'சாம்பியன்' ஆகிய மூன்று படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் சுசீந்திரனின் 'கென்னடி கிளப்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் கபடி விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரக்கனி, காயத்ரி, சூரி, முனிஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் குருதேவ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

More News

காதலர் தினத்தில் 10 ஆயிரம் மாணவர்களிடம் உறுதிமொழி பெற்ற அமைப்பு

இந்தியாவின் ஒருசில பகுதிகளில் 'காதலர் தினத்தன்று சுற்றித்திரியும் ஜோடிகளை பிடித்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் அராஜகம் நடந்து வரும் நிலையில்

காமெடி நடிகை மதுமிதாவின் திருமண தேதி

'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள ஜாங்கிரி மதுமிதா உதவி இயக்குனர் மோசஸ் ஜோல் என்பவரை பிப்ரவரி 15ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். 

50 பயணிகளை காப்பாற்றி உயிர்த்தியாகம் செய்த சென்னை பேருந்து ஓட்டுனர்

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணிகளின் பாதுகாப்பை கருதி பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மரணம் அடைந்தார்.

'காற்றின் மொழி' பட நடிகை கர்ப்பம்: ரசிகர்கள் வாழ்த்து

ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படத்தில் ஆர்ஜே அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து அனைவர் மனதையும் கவர்ந்தவர் நடிகை சாண்ட்ரா.

'மகரிஷி' நாயகனை சந்தித்த 'தேவ்' நாயகன்

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் நாளை காதலர் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதால் படத்தின் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.