உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும்: அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு தேர்தல் சீசனிலும் கோலிவுட் திரையுலகில் உள்ளவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தோ அல்லது ஏதாவது அரசியல் கட்சியில் இணைந்தோ அரசியலில் குதிப்பது வாடிக்கையாகி உள்ளது. இந்த தேர்தலின்போதும் ஒருசில நட்சத்திரங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தும், அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியில் இணைந்தும் உள்ளனர்.
இந்த நிலையில் அரசியல் தனக்கு தேவையில்லை என்று ஒதுங்கி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அஜித்தை அரசியலுக்கு வருமாறு பிரபல இயக்குனர் சுசீந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறே. இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்..என அஜித்துக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வறுமையை உணர்ந்தவனால் மட்டுமே மக்களின் தலைவனாக முடியும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். சுசீந்திரனின் வேண்டுகோளை அஜித் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#ThalaAjithkumarfans ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️welcome naaaaaa❤️❤️❤️@SureshChandraa @PTTVOnlineNews ???????? pic.twitter.com/hAmQgzgYF9
— Suseenthiran (@dir_susee) March 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments