சிம்பு இல்லாமலேயே படப்பிடிப்பை தொடங்கிய சுசீந்திரன்: நாயகி யார்?

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் ஒரு படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை முப்பதே நாட்களில் முடிக்க சுசீந்திரன் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் திண்டுக்கல்லில் தொடங்க உள்ளதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் படப்பிடிப்பை திண்டுக்கல்லில் இயக்குனர் சுசீந்திரன் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த படப்பிடிப்பில் வரும் எட்டாம் தேதி முதல் சிம்பு கலந்து கொள்வார் என்றும் அதுவரை அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்படும் என்றும் தெரிகிறது

மேலும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக பூமி படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த நிதி அகர்வால் நடிக்க இருப்பதாக தெரிகிறது. திரு ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன்பின்னர் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் சிம்பு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

சென்னை பெண் தொழிலதிபரின் ஆபாச படத்தை வைத்து மிரட்டிய வாலிபர்: வளைத்து பிடித்த கணவர்!

சென்னை பெண் தொழிலதிபர் ஒருவரின் ஆபாச படத்தை வைத்துக்கொண்டு மிரட்டியதோடு அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய வாலிபர் ஒருவரை பெண் தொழிலதிபரின்

முதல் நாளே தலைகுப்புற கீழே விழுந்த அறந்தாங்கி நிஷா: என்ன ஆச்சு?

ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர நிகழ்ச்சியை விட அந்த நிகழ்ச்சியின் 10 வினாடி புரோமோ விடியோ பெரும் எதிர்ப்பார்ப்பையும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.

தொடர்நது குண்டு மழை பொழியும் அர்மீனியா- அஜர்பைஜான் மோதல், மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா???

கொரோனா தாக்கத்தால் உலகமே கதிகலங்கி இருக்கும் நேரத்தில் முன்னாள் சோவியத் நாடுகளான அர்மீனியாவும் அஜர்பைஜானும் தங்களுக்குள் கடுமையான தாக்குதலை நடத்திக் கொள்கின்றன.

ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான 2ஜி மேல்முறையீட்டு வழக்கு; கிடுக்குப்பிடிக் காட்டும் சிபிஐ, அமலாக்கத்துறை!!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை மீதான மேல்முறையீட்டு வழக்குகள் இன்றுமுதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி… முன்னுரிமை யாருக்கு???

இந்தியாவில் கோவேக்சின், ஜைகோவ்டி என இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன