சுசீந்திரனின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கி முடித்துள்ள அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவான திரைப்படத்திற்கு ’சிவசிவா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த படத்தின் டைட்டில் ’வீரபாண்டியபுரம்’ என்று மாற்றப்பட்டதாக சமீபத்தில் சுசீந்திரன் அதிகாரபூர்வமாக அறிவித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதை சுசீந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் பிப்ரவரி 18ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் ரன்னிங் டைம் 119 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜெய் இந்த படத்தில் நாயகனாக நடித்தது மட்டுமின்றி இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.