டவுட்டே வேணாம், உங்களை பழிவாங்கத்தான் போறேன்: 'கென்னடி கிளப்' டீசர் விமர்சனம்
- IndiaGlitz, [Saturday,May 25 2019]
'கனா' திரைப்படத்தின் வெற்றி, விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்களை குறிப்பாக பெண்கள் விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இயக்க பலர் முன்வந்துள்ளனர். அவற்றில் 'தளபதி 63' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய படங்களும் அடங்கும். இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள 'கென்னடி கிளப்' திரைப்படத்தின் டீசர் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளராக சசிகுமார் நடித்துள்ளார். அவரது டீம் சர்வதேச கபடி போட்டியில் வெற்றி பெற்றதா? என்ற கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளது தெரிகிறது. ஆங்காங்கே ஆவேசமான வசனங்கள். குறிப்பாக 'கபடி, இந்தியாவின் பாரம்பரியான விளையாட்டு. லாஸ்ட் 25 இயர்ஸ்ஸா இண்டர்நேஷனல் லெவல்ல நாமதான் சாம்பியன்' என்ற வசனமும், 'கடைசி தீக்குச்சியை கொளுத்தும்போது இருக்குற கவனம் முதல் குச்சியை கொளுத்தும்போதே இருக்கணும்: அப்பதான் நாம ஜெயிக்க முடியும்' என்ற என்ற வசனமும் மாஸ்
சசிகுமாரின் 'கெத்து' நடிப்பு, பாரதிராஜாவின் வழக்கமான உணர்ச்சிகரமான நடிப்பும் இந்த படத்திலும் மிஸ் ஆகவில்லை.
கபடிப்போட்டியில் ஸ்டண்ட் காட்சிகளையும் இணைத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அதேபோல் ஆண்கள் ஒரு அணியிலும் பெண்கள் ஒரு அணியிலும் விளையாடும் வித்தியாசமான கபடி போட்டியையும் இந்த டீசரில் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் 'வெண்ணிலா கபடிக்குழு' போல் மீண்டும் ஒரு விறுவிறுப்பான விளையாட்டு படத்தை இயக்குனர் சுசீந்திரன் கொடுத்திருக்கின்றார்.
டி.இமானின் பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. குருதேவ் ஒளிப்பதிவில் கபடிக்காட்சிகள் அனல் பறக்கின்றது.