இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,May 06 2017]

'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை பல வெற்றி படங்களை இயக்கிய கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் தற்போது தனது அடுத்த படத்தின் தலைப்பை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

'அறம் செய்து பழகு' என்பது தான் சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ஆகும். இந்த படத்தில் சந்தீக் கிஷான், மெஹ்ரின் பிர்ஜாதா, விக்ராந்த், ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி உள்பட பல நடிக்கவுள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த படத்தின் பாடல் ஒன்றை சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் பாட இமான் ஒலிப்பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்றும் சுசீந்திரன் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தை அன்னை பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கின்றது.

More News

பிரபல நடிகை-அரசியல்வாதி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மர்ம போன் கால் ஒன்றால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறையிலும் முன்னேறி வரும் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே அரை டஜன் படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன '100% லவ்' என்ற படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

'பள்ளிப்பருவத்திலேயே: பிரபல இசையமைப்பாளரின் மகன் ஹீரோவாகும் படம்

கடந்த 90ஆம் ஆண்டுகளில் உள்ள அள்ளித்தந்த பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் சிற்பி. இவரது இசையில் உருவான நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்கொடி, உன்னை நினைத்து போன்ற பல படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றன.

'விவேகம்' டீசர் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மே 18 என்றும், டீசரின் ரன்னிங் டைம் 64 வினாடிகள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியில் கமல்ஹாசன்

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தலைமை எடிட்டராக இருந்த அர்னாப் கோஸ்வாமி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதியதாக 'ரிபப்ளிக் டிவி' என்ற தொலைக்காட்சியை ஆரம்பிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...