சுசீந்திரனின் 'நெஞ்சில் துணிவிருந்தால்' ஓப்பனிங் வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,November 13 2017]

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் கடந்தவாரயிறுதி நாட்களில் சென்னையில் ரூ.31,64,855 வசூல் செய்துள்ளது. இந்த படம் சென்னையில் 21 திரையரங்குகளில் 132 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது என்பதும் திரையரங்குகளில் 75% பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுமுகங்களுடன் கூடிய குறைந்த பட்ஜெட் திரைப்படமான இந்த படம் சராசரியான ஒப்பனிங் வசூலை பெற்றுள்ள நிலையில் இனிவரும் நாட்களிலும் இதே வசூலை பெற்றால் வசூல் அளவிலும் இது ஒரு வெற்றிப்படமாக கருதப்படும்