'சூர்யாவின் சனிக்கிழமை': மாஸ் நடிகரின் படத்திற்கு வைக்கப்பட்ட டைட்டில்..!

  • IndiaGlitz, [Monday,October 23 2023]

தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரின் திரைப்படத்திற்கு ’சூர்யாவின் சனிக்கிழமை’ என தமிழில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்கவிருக்கும் 31வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் நானி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிட வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஐந்து மொழிகளுக்கும் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழில் இந்த படத்திற்கு ’சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புரமோஷன் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விவேக் அதிரேயா இயக்கத்தில் முரளி ஒளிப்பதிவில் கார்த்திகா படத்தொகுப்பில் ஜேக்ஸ் பிஜாய் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் நானிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திடீரென கட்சியில் இருந்து விலகிய கவுதமி.. பாஜக பிரமுகர் அளித்த விளக்கம்..!

நடிகை கவுதமி கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த நிலையில் இன்று அவர் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கவுதமி கட்சியில் இருந்து விலகியது தனக்கு மனம் வருத்தம்

சென்னையில் அஜித் வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்த அதிகாரிகள்.. என்ன காரணம்?

சென்னையில் உள்ள அஜித் வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சமுத்திரக்கனியின் புதிய படம்..  பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்

சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவக்கப்பட்டுள்ளது.

கமல் -மணிரத்னம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த கமல்ஹாசன்.. ரசிகர்கள் உற்சாகம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து 'நாயகன்' என்ற திரைப்படத்தில் பணிபுரிந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இருவரும்

ஒரு வாரத்திற்குள் ரூ.100 கோடி வசூலை அள்ளும் விஜய் படங்கள்.. 'லியோ' எத்தனையாவது படம்?

தளபதி விஜய்யின் படங்கள் என்றாலே ஓபனிங் மிக அபாரமாக இருக்கும் என்பதும் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்பதை பார்த்து வருகிறோம்.