சூர்யாவின் இளமைக்கால க்ரஷ் இந்த நடிகையா? மாட்டிவிட்ட கார்த்தி.. இல்ல கத்தி..!

  • IndiaGlitz, [Saturday,November 09 2024]

நடிகர் சூர்யாவின் இளமைக்கால கிரஷ் என ஒரு நடிகையை குறிப்பிட்டு கார்த்தி கூறிய நிலையில், நீ கார்த்தி இல்ல, கத்தி, என்று சூர்யா விளையாட்டாக அவர் மீது கோபமடைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடித்த ’கங்குவா’ வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக சூர்யா நாடு முழுவதும் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலையாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, பாலையா திடீரென கார்த்திக்கு போன் செய்து, உன் அண்ணனின் இளமைக்கால கிரஷ் நடிகை யார்? என்று கேட்டார். அதற்கு, சிக்குபுக்கு ரயிலே பாடலில் நடனமாடிய கௌதமி, என்று கார்த்தி கூறினார். உடனே பாலையா, நாளைக்கு இதுதான் பிரேக்கிங் நியூஸ், என்று கூறிய நிலையில், அருகில் இருந்த சூர்யா, டேய், நீ கார்த்தி இல்லடா, கத்தி, என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யாவின் இளமைக்கால கிரஷ் கௌதமி என்பது யாருக்குமே தெரியாத நிலையில் தற்போது தெரிய வந்துள்ளதை இதுகுறித்து ரசிகர்களின் காமெடியான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது.