'வாடிவாசல்' காளையுடன் புத்தாண்டு வாழ்த்து கூறிய சூர்யா: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,April 14 2022]

’வாடிவாசல்’ காளையை கையில் பிடித்துக்கொண்டு ’இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என நடிகர் சூரியா கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

இன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டு திருநாளை கொண்டாடி வருகின்றனர் என்பதும் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

அதேபோல் திரையுலக பிரமுகர்களும் தங்களது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா காளை மாட்டை கையில் பிடித்துக் கொண்டு வரும் வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ’இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் பாலாவின் இயக்கத்தில் சூர்யாவின் 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.