மீண்டும் ஒரே படத்தில் இணையும் சூர்யா-கார்த்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் சகோதர நடிகர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பது அபூர்வமாக நடக்கும் நிகழ்வு. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருந்து, வெற்றிப்படங்களை கொடுத்து வரும் சகோதரர்களான சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து முக்கிய வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே இருதரப்பு ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பம்.
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தில் சூர்யா ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்து தற்போதைக்கு ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளார். இந்த நிலையில் கார்த்தி நடித்துள்ள 'தேவ்' படத்தில் தற்போது சூர்யா இணைந்துள்ளார்.
ஆம், கார்த்தியின் 'தேவ்' படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் கார்த்தி ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Anna will be releasing the #DevTrailer at 5:30pm. #Dev pic.twitter.com/BO8Dr5PBG0
— Actor Karthi (@Karthi_Offl) January 31, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com