'கங்குவா' படத்தின் அனைத்து மொழிகளிலும் சூர்யா வாய்ஸ்.. எப்படி தெரியுமா?
- IndiaGlitz, [Monday,October 14 2024]
சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம், தமிழ் உட்பட சுமார் 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் சூர்யா குரல் திரையில் ஒலிக்க என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் கூறியதாவது, சூர்யா தன்னுடைய கதாபாத்திரத்துக்காக தமிழில் மட்டுமே டப்பிங் செய்ய உள்ளார். ஆனால், மற்ற மொழிகளிலும் திரையில் சூர்யாவின் குரலே ஒலிக்கிறது போல இருக்கும். சூர்யாவின் கேரக்டருக்கு வேறொருவர் டப்பிங் செய்தாலும் ஏஐ டெக்னாலஜி மூலம் சூர்யாவின் குரல் அனைத்து மொழிகளிலும் மாற்றம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் வெளியான ’வேட்டையன்’ திரைப்படத்திலும் AI தொழில்நுட்பத்தின் மூலம் அமிதாப் பச்சனின் குரல் மாற்றப்பட்டதுபோல், சூர்யாவின் குரலும் அதே முறையில் மாற்றப்பட இருப்பதாகவும், அதனால் தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் சூர்யாவின் குரலை கேட்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சுமார் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது.
"All the version of #Kanguva will have #Suriya's voice🎙️🔥. Suriya will originally dub in Tamil, other versions dubbing will be done in AI👌"
— AmuthaBharathi (@CinemaWithAB) October 13, 2024
- Producer GnanavelRaja pic.twitter.com/EFs8tgm6Il