ஜல்லிக்கட்டு வீரராகவே மாறிவிட்ட சூர்யா: 'வாடிவாசல்' படப்பிடிப்பின் மாஸ் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,March 21 2022]

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு நேற்று ஈசிஆர் பகுதியில் நடைபெற்றதாகவும், இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்..

இந்த நிலையில் தற்போது இந்த ஒத்திகை படப்பிடிப்பு குறித்த மேலும் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் சூர்யா அசல் ஜல்லிக்கட்டு வீரராகவே மாறி தோற்றமளிக்கும் காட்சி உள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே ‘வாடிவாசல்’ படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா பழகி வருகிறார் என்றும் இதற்காக பிரத்யேகமாக ஜல்லிக்கட்டு வீரர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார் என்றும் செய்திகள் வெளியானது.

கிராபிக்ஸ் மற்றும் டெக்னிக்கல் காட்சிகள் இன்றி நிஜமாகவே ஜல்லிக்கட்டு காளைகளுடன் மோதும் காட்சியில் சூர்யா நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் பிரபல தயாரிப்பாளர்!

விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர், அந்த படம் ரிலீஸுக்கு முன்னரே மேலும் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் அதிக திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன என்ற செய்தியை பார்த்து வருகிறோம்.

'படக்குழு கொண்டாடாத 'பீஸ்ட்' இசை வெளியீட்டு விழாவை கொண்டாடிய ரசிகர்கள்!

'பீஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழுவினர் கொண்டாடவில்லை என்று முடிவெடுத்த நிலையில் ரசிகர்களே இசை வெளியீட்டு விழாவை கொண்டாடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

10 ஆயிரம் சதுர அடி போஸ்டர் மூலம் அஜித் படத்தின் முக்கிய அறிவிப்பு!

அஜித் நடித்த 'வலிமை' படத்தின் முக்கிய அறிவிப்பை பத்தாயிரம் சதுர அடி போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஆர்.ஆர்.ஆர்' வெற்றிக்காக புகழ் பெற்ற கோவிலுக்கு சென்ற எஸ்.எஸ்.ராஜமெளலி!

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.