close
Choose your channels

'ரோலக்ஸ்' படம் குறித்து சூப்பர் அப்டேட்டை தெரிவித்த சூர்யா.. ரசிகர்கள் செம்ம குஷி..!

Wednesday, March 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் 'ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் சூர்யா தோன்றினார் என்பதும் அந்த கேரக்டரில் அவர் நடிப்பில் மிரட்டிய நிலையில் இந்த கேரக்டரை வைத்து ஒரு படம் எடுத்தால் சூப்பராக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ரஜினி படத்தை அடுத்து 'ரோலக்ஸ்’ படத்தை தான் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்த செய்திகள் அவ்வப்போது இணையதளங்களில் வைரல் ஆகி வந்தது.

இந்த நிலையில் நேற்று ’கங்குவா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் விழாவில் பிரபல நடிகர் வருண் தவான் 'ரோலக்ஸ்’ படம் குறித்த கேள்வி எழுப்பியபோது 'ரோலக்ஸ்’ படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தனது அடுத்த படம் அதுதான் என்றும் அவர் கூறியதை அடுத்து 'ரோலக்ஸ்’ படம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘கங்குவா’ படத்தை அடுத்து ’அயலான்’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அடுத்த படமாக 'ரோலக்ஸ்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 171’ படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை முடித்தவுடன் சூர்யாவுடன் 'ரோலக்ஸ்’ படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’விக்ரம்’ படத்தில் ஐந்து நிமிடம் தோன்றிய கேரக்டரிலேயே மிரட்டிய சூர்யா ஒரு முழுமையான 'ரோலக்ஸ்’ படத்தை எடுத்தால் அதில் எப்படி நடிப்பார் என்பதை நினைத்து பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment