இந்த ஆண்டு சூர்யா ரசிகர்களுக்கு டபுள் விருந்தா? பிரபலம் கூறிய மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,March 16 2024]

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டியில் சூர்யாவின் 43 வது படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறியுள்ளதை அடுத்து ’கங்குவா’ மற்றும் ’சூர்யா 43’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகயுள்ளதால் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு இது நூறாவது படம் என்ற நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’சூர்யா 43’ படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறியுள்ளார். எனவே தேர்தலுக்குப் பின் மே அல்லது ஜூன் மாதத்தில் ’கங்குவா’ படமும் இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ’சூர்யா 43’ படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து சூர்யா ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக உள்ளது.

மேலும் சூர்யா ’கர்ணா’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பிலும் அவர் இடையிடையே கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'கோட்' திரைப்படத்தில் த்ரிஷாவின் டான்ஸ்.. இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்ட செம்ம புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் த்ரிஷா சிறப்பு தோற்றமாக ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக தகவல் வெளியானது

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிப்பு.. 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதி என்ன?

ஒரு சில தமிழ் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருந்ததாகவும் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து

ஒரு நல்ல காரியத்திற்காக இணைந்த மதன்கெளரி - புகழ்.. வீடியோ வைரல்..!

'குக் வித் கோமாளி உள்பட சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தற்போது சினிமாவிலும் நடித்து வரும் புகழ் மற்றும் பிரபல யூடியூபர் மதன் கௌரி ஆகிய இருவரும் ஒரு நல்ல காரியத்திற்காக இணைந்து வெளியிட்ட வீடியோ தற்போது

பிரபல பாலிவுட் இயக்குனரின் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ்.. பான் -இந்தியா படமா?

சூர்யா, தனுஷ் உட்பட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகின்றனர் என்பதும் சில படங்கள் பான் இந்திய படங்களாக உருவாக்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்

தான் உடுத்திய ஆயிரக்கணக்கான சேலைகளை ஆன்லைனில் விற்கும் சேரன் பட நடிகை.. விலை எவ்வளவு?

சேரன் நடித்த படங்கள் உள்பட சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்த நடிகை தன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான சேலைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக இன்ஸ்டாகிராமில்