'சார்பாட்டா பரம்பரை' படம் குறித்து சூர்யாவின் விமர்சனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்த ’சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே
திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில் சற்றுமுன் சூர்யா இந்த படம் குறித்து தனது கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இந்த படம் குறித்து கூறியதாவது: சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது! வாழ்த்துகள்!! என கூறியுள்ளார்.
ஏற்கனவே ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் ‘கபிலன்’ கேரக்டரில் சூர்யா நடிக்க இருந்ததாகவும் அதன் பின் சில எதிர்பாராத சூழ்நிலை காரணமாக அந்த படத்தில் இருந்து அவர் விலகியதாகவும் அதனை அடுத்து இந்த படத்தில் ஆர்யா நடிப்பதாகவும் கூறப்பட்டது என்பது தெரிந்ததே.
சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! #SarpattaParambaraiOnPrime @beemji @arya_offl ??
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments