மத்திய அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது: சூர்யா டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு இன்று புதிய வேளாண்மை சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து இந்த முடிவு தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக சூர்யா சற்றுமுன் ட்விட் செய்துள்ளார்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய வேளாண்மை சட்டத்தை அமல்படுத்தியது என்பதும், இந்த சட்டத்திற்கு அனைத்து மாநில விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மோடி அவர்கள் புதிய வேளாண்மை சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனை அடுத்து பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் இன்று காலை ஏற்கனவே நடிகர் கார்த்டி தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்த நிலையில் சற்று முன் நடிகர் சூர்யா டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:
உழவே தலை
விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…
உழவே தலை
— Suriya Sivakumar (@Suriya_offl) November 19, 2021
விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…#FarmLawsRepealed #FarmLaws
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com