பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது: சுற்றுச்சூழல் விவகாரம் குறித்து சூர்யா

  • IndiaGlitz, [Wednesday,July 29 2020]

கடந்த சில நாட்களாக மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் குறித்த செய்திகள் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த விதிகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது என்பதும் இந்த விதிகளில் உள்ள சில சரத்துக்களை அரசியல் தலைவர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்காமலேயே நிறைவேற்றலாம் என்ற சரத்துக்கு அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நேற்று இதுகுறித்து உழவன் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள கார்த்திக்கின் சகோதரரும் நடிகருமான சூர்யா இதுகுறித்து கூறியதாவது:

’பேசிய வார்த்தைகளை விட பேசாத மௌனம் மிக ஆபத்தானது’ என்றும் ’காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க, நம் மௌனம் கலைப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சூர்யாவின் இந்த பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது